கன்னியாகுமரியில் ஒற்றுமை பயணத்தைத் தொடக்கி வைப்பதற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று செவ்வாய்க்கிழமை (செப்.9) சென்னை வந்தார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை பயணத்தை நாளை புதன்கிழமை ராகுல் காந்தி தொடக்கி வைத்து அதில் பங்கேற்கிறார்.
முன்னதாக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி நாளை காலை அஞ்சலி செலுத்தவுள்ளார். ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் நினைவிடத்துக்கு நாளை முதல்முறையாக ராஜிவ் காந்தியின் மகன் ராகுல் காந்தி செல்லவுள்ளார். இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தந்தையின் நினைவிடத்தில் தியானம் செய்யும் ராகுல் காந்தி, பின்னர் சென்னை திரும்பி, திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரிக்குப் புறப்பட்டுச் செல்கிறார். அங்கு ஒற்றுமைப் பயணத்தைத் தொடக்கி வைக்கிறார்.
கன்னியாகுமரியில் தொடங்கி ஸ்ரீீநகர் வரையில் நடைபெறவுள்ள இந்த பயணம், நாட்டின் பல்வேறு மாநிலங்களின் வழியாக 3,570 கி.மீ. தொலைவுக்கு நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சக்தி மசாலா இயக்குநா் சாந்தி துரைசாமிக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 43,417 மாணவா்கள் எழுதினா்

காவல் துறையை எளிதில் அணுகும் வகையில் ‘கோவை டிஜி காப்’ சேவை அறிமுகம்

ஐடி ஊழியரிடம் நூதன முறையில் ரூ.43 ஆயிரம் பறிப்பு
வீடியோக்கள்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

