வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மீனவர்களை விடுவிக்கக்கோரி மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளா

News image
Updated On :7 செப்டம்பர் 2022, 4:04 pm

DIN


இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும்,
அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 9 மாதங்களில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 150 தமிழக மீனவர்களை தூதரக நடவடிக்கைகள் மூலம் விடுவிக்க உதவியமைக்காக தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 6-ஆம் தேதி புதுச்சேரியைச் சேர்ந்த விசைப்படகில் மயிலாடுதுறை
மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் உள்ளிட்ட 12 இந்திய மீனவர்கள்
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதை கவனத்திற்கு கொண்டுவருகிறேன். 

தற்போதைய நிலவரப்படி, இலங்கை அரசின் வசம் 23 மீனவர்களும்,
95 மீன்பிடிப் படகுகளும் உள்ளது. இதனால், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிப்பதற்குத் தேவையான தூதரக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.