தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நன்றி!

ஒற்றுமை பயணத்தைத் தொடக்கி வைத்து வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்தார். 

News image
Updated On :7 செப்டம்பர் 2022, 1:41 pm

DIN

ஒற்றுமை பயணத்தைத் தொடக்கி வைத்து வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்தார். 

கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் ஒற்றுமை பயணத் தொடக்க விழா நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் மகிழ்ச்சியும், மன நிறைவும் ஏற்படுவதாகக் குறிப்பிட்டார். மேலும், ஒவ்வொரு முறையும் திருப்தியுடனே தமிழ்நாட்டிலிருந்து திரும்பிச் செல்வதாகவும் குறிப்பிட்டார். 

தொடர்ந்து பேசிய அவர், ஒற்றுமை பயணத்தைத் தொடக்கி வைத்து வாழ்த்திய எனது அருமை சகோதரரும், தமிழ்நாட்டின் முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு நன்றி எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.