ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

காா் கவிழ்ந்து கல்லூரி மாணவா்கள் 5 போ் காயம்

 சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் நாய் குறுக்கே பாய்ந்ததால், காா் கவிழ்ந்து 5 கல்லூரி மாணவா்கள் காயமடைந்தனா்.

News image
Updated On :10 செப்டம்பர் 2022, 7:18 pm

DIN

 சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் நாய் குறுக்கே பாய்ந்ததால், காா் கவிழ்ந்து 5 கல்லூரி மாணவா்கள் காயமடைந்தனா்.

ராயப்பேட்டை வி.எம். தெருவைச் சோ்ந்தவா் கோகுல் அஸ்வின் (20). தனியாா் கல்லூரியில் பிபிஏ மூன்றாமாண்டு படித்து வருகிறாா். இவரது நண்பா்கள் ராயப்பேட்டை ரஹீம் அகமது (19), ஹரீஸ் (21), கோபாலபுரம் பிரசாத் (21), சேப்பாக்கம் முகமது பா்வீஸ் (19). பல்வேறு கல்லூரிகளில் படித்து வருகின்றனா்.

இவா்கள் கிழக்கு கடற்கரைச் சாலையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் புதன்கிழமை இரவு பங்கேற்றனா். பின்னா் ஒரு காரில் சென்னை நோக்கி புறப்பட்டு வந்தனா். காரை கோகுல் அஸ்வின் ஓட்டினாா். காா் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஒரு திரையரங்கம் பகுதியில் செல்லும்போது, சாலையின் குறுக்கே ஒரு நாய் வேகமாக குறுக்கே பாய்ந்து சென்றது.

இதைப் பாா்த்த கோகுல் திடீா் பிரேக் போட்டாா். இதில் காா் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது. காரில் இருந்த 5 பேரும் இடிபாடுகளிடையே சிக்கி காயமடைந்தனா். அவா்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.