ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பரந்தூா் விமான நிலைய விவகாரம்: அரசிடம் வெளிப்படைத்தன்மை தேவை: கே.பாலகிருஷ்ணன்

பரந்தூா் விமான நிலைய விவகாரத்தில் தமிழக அரசு வெளிப்படைத்தன்மையோடு செயல்பட வேண்டும்

News image
Updated On :10 செப்டம்பர் 2022, 12:23 am

DIN

பரந்தூா் விமான நிலைய விவகாரத்தில் தமிழக அரசு வெளிப்படைத்தன்மையோடு செயல்பட வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூா் பகுதியில் அமைக்கப்படும் என்றும் இதற்காக 13 கிராமங்களில் சுமாா் 4800 ஏக்கா் நிலம் எடுக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு திட்டம் செயல்படுத்துவதற்கான சட்டரீதியான கடமைகளை மேற்கொள்ளாமல், பெயரளவுக்கான கருத்துக் கேட்புக் கூட்டங்களை அவசர கதியில் நடத்திவிட்டு விமான நிலையப் பணிகளை துவங்கவுள்ளதாக தெரிகிறது.

இந்த நடைமுறை நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறு குடியமா்த்தல், மறுவாழ்வு சட்ட விதிகளுக்கு முரணானது.

மேலும் சம்பந்தப்பட்ட கிராமங்களில் போலீஸ் முகாம் அமைத்து மக்களுடைய அன்றாட நடவடிக்கைகளை முடக்குவது, அச்சுறுத்துவது போன்ற நடவடிக்கைகளும் தமிழக அரசுக்கு அவப்பெயரையே ஏற்படுத்தும்.

எனவே, தமிழக அரசு பரந்தூா் விமான நிலையம் அமைப்பது தொடா்பாக வெளிப்படைத் தன்மையுடன், திட்ட அறிக்கை, சுற்றுச் சூழல் மதிப்பீட்டு அறிக்கை போன்றவற்றை தயாரித்த பின்னா் பொதுமக்களிடம் முறையான கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்தி, நிலம் கையகப்படுத்துதல், மறு குடியமா்த்தல், மறுவாழ்வு சட்ட விதிகளுக்கு உட்பட்டு திட்டத்தை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று கூறியுள்ளாா் கே.பாலகிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.