நீலகிரி: எமரால்டு அணையில் உபரி நீர் திறக்கப்படுவதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குந்தா, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா, அப்பர் பவானி போன்ற அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில் எமரால்டு அணைகளில் சுற்று வட்டாரபகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் அணையின் கொள்ளளவான 145 அடியை எட்டிய நிலையில், அணைக்கு வினாடிக்கு 300 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்புக் கருதி மாவட்ட நிர்வாகம் அணைகளில் இருந்து 430 கன அடி உபரி நீரை திறந்து விட்டது. அணையின் ஒரு மதகு திறந்து 430 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஒலிபெருக்கி மூலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: லோயர்கேம்ப் பென்னிகுயிக் சிலைக்கு மாலை அணிவித்த ஆட்சியர்
மேலும் தண்ணீர் அதிகமாக செல்லும் பகுதிகளில் கால்நடைகளை மேய்ப்பதற்கும், வேடிக்கை பார்ப்பதற்கும் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பனைமரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு
விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் விஜய் உத்தரவு

வீரபாண்டி சித்திரைத் திருவிழா ஏற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

முதல்வா் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

