ஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு! இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அசாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்! தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு
/

தமிழக விளையாட்டுத் துறை சுறுசுறுப்பாக இயங்குகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக விளையாட்டுத் துறை சுறுசுறுப்பாக இயங்குகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 5:50 am

DIN

தமிழக விளையாட்டுத் துறை சுறுசுறுப்பாக இயங்குகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு வீரர்களுக்கு உள்ள சந்தேகங்களை கேட்டறிய 'ஆடுகளம்' உதவி மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான சந்தேகங்களை தொலைபேசி மூலம் கேட்டறிய உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் கோப்பை மாநில விளையாட்டுப் போட்டிகளுக்கான இணையதளப் பதிவையும் முதல்வர் தொடக்கிவைத்தார்.

மேலும், சர்வதேச, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வென்ற வீரர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் 1,130 வீரர்கள், வீராங்கனைகளுக்கு காசோலைகள், விருதுகளை வழங்கினார்.

2018-19-20-21-ம் ஆண்டுக்கான விளையாட்டு விருதாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசுத் தொகையை வழங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் விழாவில் பேசியதாவது:

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிராண்ட் மாஸ்டர்கள் மூலம் இலவசமாக நேரடியாக பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கபடி, சிலம்பம் ஆகிய பாரம்பரிய போட்டிகளுக்கு சிறப்பு கவனம் வழங்கப்பட்டுள்ளது.

உலகளவில் விளையாட்டில் தமிழக வீரர்கள் பங்கேற்று சாதனை புரிய வேண்டும் என்பதால் இது போன்ற விழா நடக்கிறது.  செஸ் ஒலிம்பியாட் மூலம் கிராமம் முதல் நகரம் வரை விளையாட்டுப் போட்டிகள் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது.

அக்டோபரில் மாவட்ட அளவிலும், ஜனவரியில் மாநில அளவிலும் முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் நடைபெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.