மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 40,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் மீண்டும் கன மழை பெய்ய துவங்கியது.
மழையின் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே இவ்விரு அணைகளும் நிரம்பிய நிலையில் இருப்பதால் அணைகளின் பாதுகாப்புக் கருதி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கிருஷ்ணராஜசாகர் அணைக்குவரும் நீரின் அளவு வினாடிக்கு 28,944 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 26,349 கன அடி வீதம் உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கபினி அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,657 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 19,667 கன அடி வீதம் உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளின் உபரி நீரால் காவிரியில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று மாலை வினாடிக்கு 30,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 40,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
இன்று மாலை மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 40,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 17,000 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 400 கன அடியிலிருந்து வினாடிக்கு 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

