குற்றச்சாட்டு என்ன?
சி. விஜயபாஸ்கர், தற்போதைய விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், தனது பணி காலத்தில் திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகா, மஞ்சக்கரனை கிராமம், வேலன் நகரில் செயல்படும் வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை 300 உள்நோயாளி படுக்கை வசதிகளுடன் இரண்டு வருடங்களாக செயல்படுவதாகவும், மேற்படி மருத்துவமனையானது புதிய மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கு தகுதியானது என்று தேசிய மருத்துவ குழுமத்தின் விதிமுறைகளுக்கு முரணாக மேற்படி மருத்துவமனைக்கு அடிப்படை சான்றிதழ் வழங்கியுள்ளார்.