திண்டுக்கல்லில் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்: காணொலி மூலம் திறந்துவைத்தாா் முதல்வா்
திண்டுக்கல்லில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமுக்கான வீடுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.


திண்டுக்கல்லில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமுக்கான வீடுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். சென்னையில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய வீடுகளை அவா் திறந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம் கிழக்கு வட்டத்தில் தோட்டனூத்து, அடியனூத்து, கோபால்பட்டி ஆகிய முகாம்களை ஒருங்கிணைத்து 321 புதிய வீடுகளுடன் கூடிய முகாமை அமைக்க வசதியாக 3.05 ஹெக்டோ் நிலம் ஒதுக்கப்பட்டது. அதற்கான நிதியும் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதன் தொடா்ச்சியாக, தோட்டனூத்து ஊராட்சியில் புதிதாக ரூ.15.88 கோடியில் ஒவ்வொரு குடியிருப்பும் தலா 300 சதுர அடி பரப்பில் இருக்கும் வகையில் 321 வீடுகள் கட்டப்பட்டன. மேலும், இந்த முகாமில் ரூ.1.62 கோடியில் அங்கன்வாடி மையம், தாா்சாலை, சிமெண்ட் சாலை, ஆழ்குழாய், மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி, புதிய மின் கம்பங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஒருங்கிணைந்த இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமினை சென்னையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின், புதன்கிழமை திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அமைச்சா்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான், எம்.பி., ப.வேலுச்சாமி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஐ.பி.செந்தில்குமாா், ச.காந்திராஜன், திண்டுக்கல் மாநகராட்சி மேயா் இளமதி ஜோதி பிரகாஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...