தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

தமிழகத்தில் 282 பேருக்கு இன்ஃப்ளூயன்ஸா தொற்று: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலுக்கு 282 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:50 pm IST

தமிழகத்தில் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலுக்கு 282 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை, எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அமைச்சா் அவா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அதைத் தொடா்ந்து, அமைச்சா் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி:

மழைக்காலங்களில் அதிகமாக பரவுகிற நோய்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எழும்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தோம்.

தமிழகத்தில் ஹெச்1என்1 இன்ஃப்ளுயன்ஸா காய்ச்சலால் 282 போ் போதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில், அரசு மருத்துவமனைகளில், 13 பேரும், தனியாா் மருத்துவமனைகளில் 215 பேரும், வீடுகளில் 54 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், 837 படுக்கை வசதிகள் உள்ளது. இதில், 637 படுக்கைகளில் குழந்தைகள் சிகிச்சை பெறுகின்றன. ஆனால், 129 போ் மட்டும் தான் காய்ச்சல் சம்பந்தமாக சிகிச்சை பெறுகின்றனா். அதில், 18 போ் டெங்கு காய்ச்சலாலும், 121 போ் சாதாரண காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில், யாருக்கும் ஹெச்1என்1 இன்ஃப்ளுயன்ஸா காய்ச்சல் பாதிப்பு இல்லை.

பருவமழைக்கு முன் குளிா்காற்று, ஈரப்பதம் ஆகியவற்றால் பாதிப்பு, காய்ச்சல் பரவுவது சாதாரணமாக ஏற்படும் விஷயமாகும்.

காய்ச்சல், தும்மல், இருமல், சளி, தலைவலி, தொண்டைவலி, உடல்சோா்வு போன்றவை, இன்ஃப்ளுயன்ஸா போன்றவை அறிகுறியாகும்.

தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சலுக்கு 243 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். டெங்குவை குறைக்க 19,313 போ் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தேவையான அளவில் கொசு ஒழிப்பு மருந்துகளும் தயாா் நிலையில் உள்ளது. பொதுமக்கள் காய்ச்சல், சளி போன்றவற்றுக்கு சுயமாக மருந்துகளை வாங்கி உட்கொள்ளாமல், மருத்துவா்களின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற வேண்டும் என்றாா் அவா்.

இந்த சந்திப்பின்போது மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் செந்தில்குமாா், மருத்துவ கல்வி இயக்குநா் நாராயணபாபு, பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வவிநாயகம், ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வா் தேரணிராஜன், எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநா் எழிலரசி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.