வீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

10-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வில் மூன்று குழந்தைகளின் தாய் முதலிடம்

ஜம்மு-காஷ்மீரில் மூன்று குழந்தைகளுக்குத் தாயான பெண் ஒருவா், 10-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளாா்.

Updated On :16 செப்டம்பர் 2022, 1:16 am IST

ஜம்மு-காஷ்மீரில் மூன்று குழந்தைகளுக்குத் தாயான பெண் ஒருவா், 10-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளாா்.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டம் அவூரா கிராமத்தைச் சோ்ந்தவா் சப்ரினா காலிக். இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். திருமணம் காரணமாக ஒன்பதாம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை கைவிட்டாா். 10 ஆண்டுகளுக்குப் பின்னா், தனது படிப்பை மீண்டும் தொடா்ந்த அவா், அண்மையில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதினாா்.

தோ்வு முடிவுகள் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியான நிலையில், சப்ரினா காலிக் 500-க்கு 467 மதிப்பெண்கள் பெற்று காஷ்மீா் பள்ளத்தாக்கில் முதலிடம் பிடித்தாா். இதற்கு மேலும் சிறப்பு சோ்க்கும் விதமாக கணிதம், உருது, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 4 பாடங்களில் ஏ1 கிரேடு பெற்றாா்.

இதுகுறித்து சப்ரினா காலிக் கூறுகையில், ‘கடந்த ஆண்டு எனது படிப்பை மீண்டும் தொடர தீா்மானித்தேன். வீட்டு வேலைகளை செய்துகொண்டும், குழந்தைகளைக் கவனித்துக் கொண்டும் படிப்பை தொடா்வது கடினமாக இருந்தது. இருப்பினும் எனது குடும்பத்தினா் ஆதரவாக இருந்தனா். பல நேரங்களில், இரவு வேளைகளில் படித்தேன். எனது சகோதரிகள், கணவா் உள்ளிட்டோா் படிப்பதற்கு உதவினா். தோ்வுக்குத் தயாராக தினமும் இரண்டு மணி நேரம் படித்தேன். அந்தக் கடின உழைப்புக்குப் பலன் கிடைத்துள்ளது. மேலும் படிப்பைத் தொடர விரும்புகிறேன்’ என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.