அமைச்சரின் வருகைக்காக தடுக்கப்பட்ட பிரதான சாலை: மக்கள் கடும் அவதி

சேலத்தில் அமைச்சரின் வருகைக்காக பிரதான சாலையில் தடுப்பு வைக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். 
அமைச்சரின் வருகைக்காக தடுக்கப்பட்ட பிரதான சாலை: மக்கள் கடும் அவதி

சேலத்தில் அமைச்சரின் வருகைக்காக பிரதான சாலையில் தடுப்பு வைக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். 

பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வருகை தந்ததால் காலை 7 மணி முதல் பிரதான சாலையில் காவல்துறையினர் தடுப்பு அமைத்து வாகனங்கள் செல்லத் தடை விதித்தனர்.

இதனால் அலுவலகம், கல்லூரி செல்வோர் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மேலும், மாற்று வழியானது சுமார் இரண்டு கிலோமீட்டருக்கு மேல் சுற்றிச் செல்வதால் வாகன ஓட்டிகள் காவல்துறையினுடனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அப்போது மாலை அணிவிக்க வந்த பாமக சட்டப்பேரவை உறுப்பினர் அருளின் காரையும் வழிமறித்து அனுமதி இல்லை என்று காவலர்கள் கூறியதால் அவரும் மாலை அணிவிக்காமல் திரும்பிச் சென்றார். அதிமுக வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. ஆனால், திமுகவின் வாகனங்களுக்கு மட்டும் காவல்துறையினர் அனுமதி வழங்கினர்.

மேலும், அமைச்சர் வந்த நேரத்தில் ஆட்சியர் அலுவலக சாலை மற்றும் அதன் அருகாமையில் உள்ள சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com