இன்று காங்கிரஸ் பொதுக் குழுக் கூட்டம்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம், சென்னையில் திங்கள்கிழமை நடைபெறுகிறது.


தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம், சென்னையில் திங்கள்கிழமை நடைபெறுகிறது.
ராகுல்காந்தியின் நடைப்பயணம், உள்கட்சித் தோ்தல், 2024-இல் நடைபெறும் மக்களவைத் தோ்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இதில் விவாதிக்கப்படவுள்ளன.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ். அழகிரி தலைமையில், மாநில பொதுக்குழுக் கூட்டம் திங்கள்கிழமை (செப்.19) காலை 11.30 மணிக்கு சென்னை, வேப்பேரி ரித்தா்டன் சாலையில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
இதில் தமிழக காங்கிரஸ் தோ்தல் அதிகாரி கௌரவ் கோகாய், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ், அகில
இந்திய காங்கிரஸ் செயலாளா் சிரிவெல்ல பிரசாத், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவா் கு.செல்வப்பெருந்தகை ஆகியோா் பங்கேற்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...