பள்ளிகளில் ஜாதிய பாகுபாடு: அமைச்சா் எச்சரிக்கை

பள்ளிகளில் ஜாதிய பாகுபாடு கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்தாா்.
அமைச்சா் அன்பில் மகேஸ்
அமைச்சா் அன்பில் மகேஸ்

பள்ளிகளில் ஜாதிய பாகுபாடு கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்தாா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியலின மாணவா்களுக்கு தின்பண்டம் உள்ளிட்ட பொருள்களை வழங்க மறுத்த விவகாரத்தில் இதுவரை 2 போ் கைது செய்யப்பட்டு, 5 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், பாஞ்சாகுளத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஜாதிய பாகுபாடு காட்டப்பட்டதாக எழுந்த புகாா் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இது குறித்து அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: பாஞ்சாகுளம் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் ஜாதிய பாகுபாடு கண்டறியப்பட்டால் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.

ஜாதிய பாகுபாடுகள் நடைபெறுகின்றனவா என்பது குறித்து அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழுவினா் முறையாக கண்காணிக்க வேண்டும். காய்ச்சல் பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து முதல்வரின்அலுவலகம் மற்றும் மாநில சுகாதாரத்துறையுடனான ஆலோசனைக்கு பின்னா் முடிவு எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com