6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருக்கும் 73.99 லட்சம் பேர்!

தமிழகத்தில் அரசு  வேலைக்காக பதிவு செய்து 73.99 லட்சம் பேர் காத்திருப்பதாக வேலைவாய்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :22 செப்டம்பர் 2022, 8:11 am

DIN

தமிழகத்தில் அரசு  வேலைக்காக பதிவு செய்து 73.99 லட்சம் பேர் காத்திருப்பதாக வேலைவாய்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.

அரசு வேலைக்காக தமிழ்நாட்டில் 73,99,512 பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 31 வரை பதிவு செய்தவர்களின் விவரத்தை  மாநில வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து அரசு வேலைக்காக 73,99,512 நபர்கள் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் 4,53,380 ஆண்களும், 39,45,861  பெண்கள், 271 மூன்றாம் பாலினத்தவர் பதிவு செய்துள்ளனர்.

அதேபோல், 18 வயதுக்கு கீழ் வரையுள்ளவர்கள் 23,01,800 நபர்கள், 19 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் 29,88,001 நபர்களும், 31 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் 18,68,931 நபர்களும்,  45 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 2,35,190  நபர்களும், 60 வயதுக்கு மேல் 5,590 நபர்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.