பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

வாலிநோக்கத்தில் எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் வீட்டில் என்ஐஏ சோதனை 

ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் பராகாக்துல்லா வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) சோதனை நடத்தி வருகின்றனர்.

News image
Updated On :22 செப்டம்பர் 2022, 4:48 am

DIN

ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் பராகாக்துல்லா வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) சோதனை நடத்தி வருகின்றனர்.

வாலிநோக்கத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் பராகாக்துல்லா வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பினர்  சோதனை நடத்தி வருகின்றனர். வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியிலிருந்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.  

தமிழகத்தில் ஒரே நேரத்தில் தேனி, திண்டுகல், மதுரை, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை பகுதிகளிலும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை ஈடுபட்டு வருகின்றனர். 

சட்டவிரோத பண பரிவர்த்தனை, பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியது என்ஐஏ அதிகாரிகளுடன் அமலாக்கத் துறையினர் இணைந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகளுக்கு தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிகாலையிலிருந்து தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் பராகாக்துல்லா வீட்டில் அதிகாலையில் இருந்து தொடர்ந்து சோதனை மற்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.