பெட்ரோல் குண்டு வீசி எங்கள் சகோதர, சகோதரிகளின் மன தைரியத்தை குறைத்து விடலாம் என்று யாரும் நினைத்து விட வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
@arivalayam Govt, people are watching the law & order of our state hitting new bottom every day!@BJP4TamilNadu à®à¯à®¯à®®à¯à®ªà¯à®¤à¯à®¤à¯à®°à¯ à®à®à¯à®à®¿ à®à®²à¯à®µà®²à®à®¤à¯à®¤à®¿à®©à¯ à®®à¯à®¤à¯ பà¯à®à¯à®°à¯à®²à¯ à®à¯à®£à¯à®à¯ வà¯à®à®¿ à®à®à¯à®à®³à¯ à®à®à¯à®¤à®° à®à®à¯à®¤à®°à®¿à®à®³à®¿à®©à¯ மன தà¯à®°à®¿à®¯à®¤à¯à®¤à¯ à®à¯à®±à¯à®¤à¯à®¤à¯ விà®à®²à®¾à®®à¯ à®à®©à¯à®±à¯ யாரà¯à®®à¯ நினà¯à®¤à¯à®¤à¯ வி஠வà¯à®£à¯à®à®¾à®®à¯.
â K.Annamalai (@annamalai_k) September 23, 2022
(2/3)
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'கோயம்புத்தூர் கட்சி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி எங்கள் சகோதர, சகோதரிகளின் மன தைரியத்தை குறைத்து விடலாம் என்று யாரும் நினைத்து விட வேண்டாம்.
இது போன்ற அச்சுறுத்தல்கள் சமூக விரோதிகளுக்கு எதிரான எங்கள் சமூக பணியை மேலும் வேகப்படுத்தும். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை திமுக அரசு உணர வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









