அனைவரையும் உள்ளடக்கியது திமுக அரசு: மு.க.ஸ்டாலின்

தமிழகத்திலுள்ள அனைத்து மக்களையும் உள்ளடக்கிய அரசாக திமுக அரசு இருக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
மேடையில் உரையாற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
மேடையில் உரையாற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்திலுள்ள அனைத்து மக்களையும் உள்ளடக்கிய அரசாக திமுக அரசு இருக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை அருகேவுள்ள வானகரத்தில் நடைபெற்ற தென்னிந்தியத் திருச்சபையின் பவள விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் மேடையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், எதுவும் இல்லாதவர்களை இணைக்கும் வகையில் திருச்சபை உருவாக்கப்பட்டுள்ளது. இதனால்தான் 40 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டதாக இந்த திருச்சபையாக உருவாகியுள்ளது. 

இந்தியா என்பது பல்வேறு மதத்தினர் வாழ்கின்ற நாடு. மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும் அனைவரும் ஒற்றுமையோடு வாழ்கிறோம். மதங்கள் பெரும்பாலும் அன்பையே போதிக்கிறது. சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, பகிர்தல், தியாகம் ஆகியவற்றையே கிறிஸ்தவம் போதிக்கிறது. 

எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடலின் நோக்கம். தவித்த வாய்க்கு தண்ணீராக, திக்கற்றவர்களுக்கு திசையாக, யாரும் இல்லாதவர்களுக்கு ஆறுதலாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. திமுக அரசு என்பது அனைவரையும் உள்ளடக்கியதுதான் எனக் குறிப்பிட்டார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com