மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!பிகார் முதல்வர் பதவிலிருந்து விலகுகிறேன்! நிதீஷ் குமார் அறிவிப்பு!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் உயர்வு

ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் உயர்த்தப்படுவதாக தெற்கு ரயில்வே வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

News image
Updated On :29 செப்டம்பர் 2022, 2:24 pm

DIN

சென்னை கோட்டத்துக்குள்பட்ட ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் உயர்த்தப்படுவதாக தெற்கு ரயில்வே வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

ஆயுதப் பூஜை, தீபாவளி, கிறுஸ்துமஸ், பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகள் வரிசையாக வரவுள்ள நிலையில், ரயில் நிலையங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மண்டலத்திற்கு உள்பட்ட 8 ரயில் நிலையங்களில் அக்டோபர் 1, 2022 முதல் ஜனவரி 31, 2023 வரை ரூ. 10-லிருந்து நடைமேடை கட்டணம் ரூ. 20-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

1. சென்னை சென்ட்ரல்
2. சென்னை எழும்பூர்
3. தாம்பரம்
4. காட்பாடி
5. செங்கல்பட்டு
6. அரக்கோணம்
7. திருவள்ளூர்
8. ஆவடி   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.