அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு செல்லும்: உயர் நீதிமன்றம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
சென்னை உயா் நீதிமன்றம்
சென்னை உயா் நீதிமன்றம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளில் சேருவதற்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், தங்களுக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என அரசு உதவிபெறும் பள்ளிகள் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி தலைமையிலான அமர்வு இன்று வெளியிட்ட தீர்ப்பில்,

“மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்பதால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கிய 7.5 சதவீத உள்ஒதுக்கீடு செல்லும்.

மேலும், 5 ஆண்டுகளுக்கு பிறகு இடஒதுக்கீடு குறித்து மறுஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

இடஒதுக்கீட்டிற்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com