மதுரை: தங்க குதிரை வாகனத்தில் பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் சனிக்கிழமை எழுந்தருளினார்.
லட்சக்கணக்கானோர் கோவிந்தா கோஷம் முழங்க ஆற்றில் எழுந்தருளிய அழகரை தரிசனம் செய்தனர். கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்தைக் காண
தல்லாகுளம் முதல் ஆழ்வார்புரம் வரையிலும் வைகையாற்றின் கரைகளிலும் மக்கள் வெள்ளம் சூழ்ந்திருந்தது.
அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 12 ஆம் தேதி தொடங்கியது. இவ்விழாவையொட்டி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக அழகர்மலையில் இருந்து கள்ளழகர் கோலத்தில் மதுரை நோக்கி தங்கப் பல்லக்கில் வியாழக்கிழமை புறப்பாடானார்.
கள்ளந்திரி, சுந்தர்ராஜன்பட்டி, கடச்சனேந்தல் வழியாக பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகர் வெள்ளிக்கிழமை அதிகாலை மதுரைக்கு வருகை தந்தார். அவரை பக்தர்கள் வரவேற்கும் எதிர்சேவை நிகழ்வு மூன்றுமாவடி பகுதியில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மதுரை நகரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான மண்டகப்படிகளில் எழுந்தருளினார். மதுரை நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் திருக்கண் மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகரை தரிசனம் செய்தனர்.
_.jpeg)
அதைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோயிலில் எழுந்தருளினார். அங்கு தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை சாத்தப்பட்டது. பின்னர் சனிக்கிழமை அதிகாலை வைகை ஆற்றை நோக்கி புறப்பாடனார். தல்லாகுளம் முதல் கோரிப்பாளையம் வரை லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.
அதன்பிறகு வைகை ஆற்றில் இறங்குவதற்காக ஆழ்வார்புரம் பகுதிக்கு எழுந்தருளினார் ஆற்றில் இறங்கும் வைபவத்தைக் காண்பதற்காக வைகை ஆற்றில் லட்சக்கணக்கானோர் கூடி இருந்தனர். வைகை ஆற்றின் இரு கரைகளிலும் ஏவி மேம்பாலத்தில் இருந்தும் ஏராளமானோர் கள்ளழகரை தரிசனம் செய்தனர். கள்ளழகர் வேடமிட்ட பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அழகரை வரவேற்றனர்.
_.jpeg)
பச்சைப்பட்டு உடுத்தி கள்ளகழகர் வைகை ஆற்றில் இறங்கியுள்ளதால், மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்று நம்பப்படுகிறது.
வைகை ஆற்றில் சனிக்கிழமை காலை எழுந்தருளிய கள்ளழகா், தீா்த்தவாரி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்குப் பின்னா், இரவு வண்டியூா் வீரராகவப் பெருமாள் கோயிலில் திருமஞ்சனமாகிறாா். ஞாயிற்றுக்கிழமை காலை அங்கிருந்து புறப்பட்டு தேனூா் மண்டபம் செல்கிறாா். அங்கு, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்து காட்சி தந்தருளிய பின்னா், இரவு 11 மணிக்கு ராமராயா் மண்டபத்தில் எழுந்தருள்கிறாா். அங்கு இரவு முழுவதும் தசாவதார நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
_.jpeg)
அதையடுத்து, திங்கள்கிழமை இரவு அனந்தராயா் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்துடன் தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னா் சேதுபதி மண்டகப்படியில் எழுந்தருளி, அங்கு திருமஞ்சனமாகிறாா்.
அதையடுத்து, செவ்வாய்க்கிழமை (ஏப்.19) அதிகாலை 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் கள்ளா் திருக்கோலத்துடன் அழகா்கோயிலுக்குப் புறப்படுகிறாா். அழகா்கோயில் செல்லும் வழி முழுவதும் மண்டகப்படிகளில் எழுந்தருளும் கள்ளழகா், புதன்கிழமை (ஏப்.20) அதிகாலை இருப்பிடம் சென்றடைகிறாா். அங்கு, உற்சவ சாந்தியுடன் சித்திரைத் திருவிழா நிறைவடைகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோனியால் உத்வேகம், 15 ஆண்டு வலி மிகுந்த காத்திருப்பு... மனம் திறந்த 33 வயதான அறிமுக வீரர்!
ஐசிசி டி20 அணிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்த இந்தியா!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.25! 2 காசுகள் சரிவு!
ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!!
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு


