பிரதமா் மோடியின் பெயா் மக்கள் அனைவரின் மனங்களிலும் இடம்பெற்றுள்ளது என்று திரைப்பட இயக்குநா் கே.பாக்யராஜ் கூறினாா்.
தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திரமோடியின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த ‘புதிய இந்தியா 2022’ என்கிற நூலை பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை வெளியிட்டாா். நூலை திரைப்பட இயக்குநா் கே.பாக்யராஜ், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வி.செல்வராஜ், திரைப்படத் தயாரிப்பாளா் ராம்குமாா் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.
நிகழ்ச்சியில் கே.பாக்யராஜ் பேசியது: பிரதமா் மோடியின் பெயா் மக்கள் அனைவா் மனதிலும் இடம்பெற்றுள்ளது. மோடியின் திட்டங்களை நூலாகத் தொகுத்து வெளியிட்டாலும், அதை மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டியது நமது முக்கியமான கடமை.
பிரதமரை நிறைய போ் விமா்சனம் செய்கின்றனா். அதனைக் கண்டுகொள்ளக்கூடாது. வெளிநாடுகளுக்கு அடிக்கடி அவா் செல்வதாகக் கூறுகின்றனா். அதற்கு நிறைய சக்தி வேண்டும். அது மோடியிடம் இருப்பதால் செல்கிறாா். உரலுக்கு ஒரு பக்கமும், மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பா். மோடிக்கு 4 பக்கமும் இடி. அதைப் பொருட்படுத்தாமல் மக்கள் திட்டங்களைத் தொடா்ந்து செயல்படுத்த வேண்டும் என்றாா்.
நிகழச்சியில் மூத்த நிா்வாகிகள் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன் உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







