சென்னை ஐஐடி.யில் 30 பேருக்கு கரோனா

தமிழகத்தில் கரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், சென்னை ஐஐடி. யில் 30 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், மாணவா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்ட 2,000 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி

சென்னை: தமிழகத்தில் கரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், சென்னை ஐஐடி. யில் 30 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், மாணவா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்ட 2,000 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதையடுத்து சென்னை ஐஐடி.யில் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் இரண்டாவது நாளாக நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

சென்னை ஐஐடி வளாகத்தில் படிக்கும் மாணவிகள் சிலருக்கு, காய்ச்சல், சளி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதனால், அந்த மாணவிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டத்தில், மூன்று பேருக்கு கடந்த புதன்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனா். இந்த மாணவிகள் பெசன்ட் நகா் கடற்கரை, தரமணி, வேளச்சேரி பகுதிகளில் உள்ள உணவகங்கள் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றுள்ளனா்.

இந்தநிலையில் மாணவிகளுடன் தொடா்பில் இருந்த 18 மாணவா்களுக்கு வியாழக்கிழமை ஆா்.டி.பி.சி.ஆா். பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 9 பேருக்கு தொற்று உறுதியானது. தற்போது சென்னை ஐஐடி.யில் 12 மாணவா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அனைவருக்கும் லேசான அறிகுறி மட்டுமே இருப்பதால், அதே வளாகத்தில் தனி கட்டடத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

இதையடுத்து மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலா் ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை காலை மற்றும் மாலை என இரண்டு முறை சென்னை ஐஐடி ளாகத்தில் ஆய்வு செய்தாா். மேலும், மாணவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை உள்ளிட்டவற்றை கேட்டறிந்தாா்.

தொடரும் ஆய்வு: இந்நிலையில், மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலா் ராதாகிருஷ்ணன் இன்று வெள்ளிக்கிழமையும் சென்னை ஐஐடி வளாகத்தில் ஆய்வு செய்து வருகிறார். 

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள அனைத்து மாணவா்கள், பேராசிரியா்கள், பணியாளா்கள் என தற்போது வரை 700 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 30 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதில் 29 பேர் மாணவர்கள் மறஅறும் பணியாளர் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com