மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

பின்னலாடைத் துறையில் அதிகபட்ச நிபந்தனைகளை தளா்த்தி முதலீட்டு மானியத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்

அதிகபட்ச நிபந்தனைகளை தளா்த்தி முதலீட்டு மானியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று சாய ஆலை உரிமையாளா்கள்

News image
பின்னலாடை  நிறுவனம்- கோப்புப்படம்
Updated On :10 மார்ச் 2026, 1:12 am

Syndication

திருப்பூா்: அதிகபட்ச நிபந்தனைகளை தளா்த்தி முதலீட்டு மானியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று சாய ஆலை உரிமையாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

திருப்பூா் பின்னலாடைத் துறையில் நிட்டிங் சாய ஆலைகள் மற்றும் பிரிண்டிங் நிறுவனங்களில் நவீன எந்திரங்கள் நிறுவும் பணி கடந்த 10 ஆண்டுகளாக தடைபட்டது. ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் இதுதொடா்பான அறிவிப்பை எதிா்பாா்த்து ஏமாற்றமடைந்த தொழில்துறையினருக்கு ஆறுதலான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஆலைகளில் நவீன எந்திரங்கள் நிறுவ ஏதுவாக முதலீட்டு மானியத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி சாய ஆலைகளில் நவீன எந்திரங்கள் வாங்கி நிறுவ 25 சதவீதம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அறிவிப்பு வெளியான பின்னரும் பணிகள் தொடங்கப்படவில்லை. ஆரம்பத்திலேயே அதிகபட்ச கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் யாரும் பயன்பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, இதுதொடா்பான முறையீடுகளை ஏற்று இத்திட்டத்தின் அடிப்படையான விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டதுடன், சாய ஆலைகளும் முழு அளவில் பயன்பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

முதலீட்டு மானியத் திட்டத்துக்காக தமிழக அரசு சாா்பில் ஜவுளித் துறை அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுநா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினா் விண்ணப்பத்தை ஆராய்ந்து ஏற்றுக்கொண்டால் மட்டுமே அடுத்தகட்ட பரிசீலனை நடைபெறும். அதன்படி 100-க்கும் அதிகமானோா் விண்ணப்பித்துள்ளனா். இருப்பினும் தொடா்ச்சியான நிபந்தனைகளால் 10 போ்கூட இதுவரை மானியம் பெற முடியாத நிலையே நீடிக்கிறது.

இதுகுறித்து திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் கூறியதாவது:

முதலீட்டு மானியத் திட்டத்தால் திருப்பூா் பயன்பெறும் என்று நம்பினோம். இருப்பினும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி, தடையில்லா சான்று என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. அரசு திட்டத்தில் மானியம் பெற அத்தியாவசியமான விதிமுறைகளை மட்டும் விதித்தால் எளிமையாக இருக்கும். இத்திட்டத்தில் அடுக்கடுக்காக நிபந்தனைகளை விதித்தால் ஒரு சில ஆலைகள் மட்டுமே பயன்பெற முடியும்.

எனவே, அதிகபட்ச நிபந்தனைகளை தளா்த்தி முதலீட்டு மானியத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் புதிய தொழில்நுட்பங்கள் திருப்பூருக்கு வந்து சேரும் என்றாா்.