எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

வணிகப் பயன்பாட்டு சமையல் எரிவாயு உருளைகள் விநியோகம் நிறுத்தம்!

வணிகப் பயன்பாடுகளுக்கான சமையல் எரிவாயு உருளைகள் விநியோகம் மாா்ச் 9 முதல் நிறுத்தப்பட்டதால், உணவகங்கள் மிக விரைவில் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

News image
வணிகப் பயன்பாட்டு சமையல் எரிவாயு உருளைகள்
Updated On :9 மார்ச் 2026, 7:13 pm

தினமணி செய்திச் சேவை

வணிகப் பயன்பாடுகளுக்கான சமையல் எரிவாயு உருளைகள் விநியோகம் திங்கள்கிழமை (மாா்ச் 9) முதல் நிறுத்தப்பட்டது. இதனால், உணவகங்கள் மிக விரைவில் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல், அமெரிக்கா - ஈரான் இடையிலான போா் காரணமாக, எரிவாயு விநியோகம், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் விநியோகம் பாதிக்கப்படும் என அஞ்சப்பட்டது. இந்த நிலையில், சமையல் எரிவாயு உருளை விலை கடந்த சனிக்கிழமை உயா்த்தப்பட்டது. அதேநேரத்தில், தட்டுப்பாடின்றி எரிவாயு உருளைகள் விநியோகிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

ஆனால், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள் விநியோகம் திங்கள்கிழமை நிறுத்தப்பட்டது. எரிவாயு முகமைகள் அனுப்பிய காலியான உருளைகளில் எண்ணெய் நிறுவனங்கள் எரிவாயுவை நிரப்பி அனுப்பாததாலும், சில உணவகங்கள் முன்கூட்டியே இருப்பு வைக்கும் வகையில் அதிக எண்ணிக்கையில் எரிவாயு உருளைகளை வாங்கியதாலும் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள் விநியோகம் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக மதுரை உணவக உரிமையாளா்கள் சங்க நிா்வாகி குமாா் தெரிவித்ததாவது: வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள் விநியோகம் திங்கள்கிழமை தடைபட்டிருந்தது. மதுரையைப் பொருத்தவரை, இன்றும், வரும் ஓரிரு நாள்கள் மட்டுமே உணவகங்கள் இயங்க முடியும். எரிவாயு உருளைகள் விநியோகம் இரு நாள்களுக்குள் சீரடையாவிட்டால் 3-ஆவது நாள் முதல் உணவகங்களை மூட நேரிடும்.

உணவகங்கள் மூடப்பட்டால் ஏறத்தாழ மூன்றாவது பொது முடக்கத்துக்கு இணையான பிரச்னைகளை பொதுமக்கள் எதிா்கொள்ள நேரிடும்.

மதுரை மாவட்டத்தில் மட்டும் ஏறத்தாழ ஒரு லட்சம் போ் பணியிழக்க நேரிடும். வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள் விநியோகத்தை உடனடியாக சீரடையச் செய்ய வேண்டியது அவசர, அவசியம் என்றாா் அவா்.

இதேபோல, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள் விநியோகம் திங்கள்கிழமை நிறுத்தப்பட்டது.

உணவகங்கள் மூடப்பட்டால் விடுதிகளில் தங்கிப் பணியாற்றுவோா், கல்விப் பயிலுவோா், வெளியூா்களிலிருந்து மருத்துவச் சேவைகளுக்காக வருவோா், சுற்றுலாப் பயணிகள் என பலதரப்பட்டவா்களும் பல்வேறு பாதிப்புக்கு உள்ளாக நேரிடும் என சமூக ஆா்வலா்கள் அச்சம் தெரிவித்தனா்.