போடியில் திமுகவினர் நடத்திய மாட்டு வண்டி பந்தயம்: மாடு முட்டி ஒருவர் பலி

போடியில் ஞாயிற்றுக்கிழமை திமுகவினர் நடத்திய மாட்டு வண்டி பந்தயத்தில் மாடு முட்டி தாக்கியதில் தொழிலாளி ஒருவர் இறந்து போனார்.
போடியில் ஞாயிற்றுக்கிழமை திமுகவினர் நடத்திய மாட்டு வண்டி பந்தயம்
போடியில் ஞாயிற்றுக்கிழமை திமுகவினர் நடத்திய மாட்டு வண்டி பந்தயம்


போடி: போடியில் ஞாயிற்றுக்கிழமை திமுகவினர் நடத்திய மாட்டு வண்டி பந்தயத்தில் மாடு முட்டி தாக்கியதில் தொழிலாளி ஒருவர் இறந்து போனார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு போடியில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. போடி மூணாறு நெடுஞ்சாலையில் நடைபெற்ற பந்தயத்தில் 150-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

மாடு முட்டியதில் சிகிச்சை பலனின்றி இறந்து போன ராமர்.

இதில், முந்தல் வரை ஓடி திரும்பிய சில மாட்டு வண்டிகள் கட்டுப்பாட்டை இழந்து பார்வையாளர்கள் நின்றிருந்த பகுதியில் புகுந்தது. இதில் ஒரு மாடு முட்டியதில் போடி குலசேகர பாண்டியன் தெருவைச் சேர்ந்த காளியப்பன் மகன் ராமர் (52) என்பவர் பலத்த காயம் அடைந்தார்.

அவர் சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

இதுகுறித்து போடி நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com