சென்னை: தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின் விபத்து ஏற்பட்டதால் பலியான 11 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்த 14 பேருக்கு தலா ரூ.25 ஆயிரமும் திமுக சார்பில் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க.. பேரறிவாளனை நாங்களே ஏன் விடுவிக்கக் கூடாது? உச்ச நீதிமன்றம் கேள்வி
இதுகுறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதாவது, தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின் விபத்து ஏற்பட்டதால் 11 பேர் பலியகினர். 14 பேர் காயமடைந்தனர்.
திமுக சார்பில், இம்மின் விபத்தில் இறந்த 11 பேர் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்த 14 பேர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் என மொத்தம் 25 லட்சத்து 50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்த்திருவிழாவில் கோர விபத்து
தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தஞ்சாவூர் - பூதலூர் சாலையில் 4 கி.மீ. தொலைவில் உள்ள களிமேடு கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு அப்பர் மடம் அமைக்கப்பட்டது.
இந்த மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி 94 ஆம் ஆண்டாக மூன்று நாள் அப்பர் சதய விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. வெகு விமரிசையாக நடைபெற்று வந்த இத்திருவிழாவில் இரவில் மின் அலங்கார தேர் புறப்பாடு தொடங்கியது. இதில் அப்பர் படம் வைத்து இழுத்து வரப்பட்டது.
தொடர்ந்து களிமேடு கிராமத்திலுள்ள நான்கு வீதிகளிலும் தேர் வலம் வந்தது. வீட்டுக்கு வீடு தேங்காய் பழம் வைத்து படையல் செய்து வழிபட்டனர். புதன்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் கீழத் தெருவிலிருந்து முதன்மைச் சாலைக்கு வந்த இத்தேர் திருப்பத்தில் திரும்பியபோது, மேலே சுமார் 30 அடி உயரத்தில் உள்ள உயரழுத்த மின் பாதையில் தேரின் அலங்கார தட்டி உரசியது.
இதனால் தேரை இழுத்து வந்த மக்கள் மீதும், சுற்றி இருந்தவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இவர்களில் களிமேடு கிராமத்தைச் சேர்ந்த எம். மோகன் (22), முன்னாள் ராணுவ வீரர் கே. பிரதாப் (36), ஏ. அன்பழகன் (60), இவரது மகன் ராகவன் (24), நாகராஜ் (60), ஆர். சந்தோஷ் (15), டி. செல்வம் (56), எம். ராஜ்குமார் (14), ஆர். சாமிநாதன் (56), ஏ. கோவிந்தராஜ் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் பலத்த காயமடைந்த எம். ரவிச்சந்திரன் (48), ஆர். கலியமூர்த்தி (40), கே. ஹரிஷ் ராம் (10), எம். நித்தீஷ் ராம் (13), ஏ. மாதவன் (22), டி. மோகன் (54), என். விஜய் (23), எம். அரசு (19), ஜி. விக்கி (21), திருஞானம் (36), வி. ஹரிஷ் (11), மதன் மனைவி சுகுந்தா (33), பி. கௌசிக் (13), எஸ். பரணி (13) ஆகியோர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் பரணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடும்ப அட்டைகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமா? அரிய வாய்ப்பு!

ஏசி ரயில் பெட்டியில் முதலிரவா? வைரல் விடியோவால் வெடித்த சர்ச்சை!
7,000mAh பேட்டரி திறன், குறைந்த விலை! மோட்டோ ஜி77 பவர் இந்தியாவில் அறிமுகமானது!

கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல! - டிரம்ப் முன்னிலையில் டென்மார்க் பிரதமர் பேச்சு!
விடியோக்கள்

பள்ளிக்கூடம் செல்ல முதல்வரிடம் பஸ் வசதி கேட்கும் மாணவி | CM Vijay | TVK | School Bus | Sivagangai
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK



