சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக்.14) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக்.14) எந்தெந்த வழக்குகள் விசாரணை? வருகின்றன என்பதைப் பற்றி...

சென்னை உயர்நீதிமன்றம். - (கோப்புப் படம்)
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம், போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு உள்பட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக். 14) விசாரணை நடத்தப்படவுள்ளன.
சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணி வழக்கை சிபிஜ விசாரணைக்கு மாற்றக்கோரி ராஜசேகரன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு விசாரிக்கப்படவுள்ளது.
காலியாக உள்ள தமிழ்நாடு மாநில எஸ்.சி,எஸ்.டி ஆணையர் பணியிடத்தை நிரப்பக் கோரி தொடரப்பட்ட வழக்கும் இன்று விசாரணை நடத்தப்படவிருக்கிறது.
பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தாக்கல் செய்த வழக்கில் இன்று (அக். 14) தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
தங்களுக்கு எதிராக பதிவு செயப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் எ.வ வேலு மற்றும் அவரது மகன் தொடர்ந்த வழக்கும் இன்று விசாரிக்கப்படுகிறது.
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதை எதிர்த்து சிவசுப்ரமணியம் என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரிக்கப்படுகிறது.
Summary
Cases including those concerning the new Secretariat at Pattinapakkam and the plea to transfer the POCSO case involving Veeramani to the CBI are scheduled to be heard at the Madras High Court today (Oct. 14).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

