சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

அதிமுக பொதுக்குழு வழக்கு: ஆகஸ்ட் 4-ல் விசாரணை

அதிமுக பொதுக்குழு தொடர்பாக  ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த  வழக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. 

News image
ஓ.பன்னீா்செல்வம்
Updated On :2 ஆகஸ்ட் 2022, 12:37 pm

DIN

அதிமுக பொதுக்குழு தொடர்பாக  ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த  வழக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. 

அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பில், ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளதாகவும். கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், அதிமுக தரப்பில் இருந்த ஒரே ஒரு நாடளுமன்ற உறுப்பினரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்னைகளை கருத்தில் கொண்டு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், வழக்கை கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்ற ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக ஓபிஎஸ் அளித்த மனு வருகிற ஆகஸ்ட் 4 ஆம் தேதி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.