வெளுத்துவாங்கிய மழைநிலவரம்: அடுத்த 4 நாள்களுக்கு வானிலை முன்னெச்சரிக்கை

தமிழகத்தில் நேற்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, மிதமான மழை பெய்தது என்ற விவரமும், அடுத்த 4 நாள்களுக்கு எங்கெல்லாம் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

தமிழகத்தில் நேற்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, மிதமான மழை பெய்தது என்ற விவரமும், அடுத்த 4 நாள்களுக்கு எங்கெல்லாம் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தொடர்மழை கனமழையினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், 

1. மழை விவரம்
தென் மேற்கு பருவமழைக் காலத்தில், 01-06-2022 முதல் 04-08-2022 முடிய 256.3 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பான மழை அளவைக் காட்டிலும் 99 விழுக்காடு கூடுதல் ஆகும்.

கடந்த 24 மணி நேரத்தில், 35 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில் மாநில சராசரி 10.59 மி.மீ. ஆகும். 

இதையும் படிக்க | அரசியல் கட்சிகளே உஷார்.. திருந்தவேண்டிய நேரம் வந்துவிட்டதோ?

4. கனமழை விவரம் (64.5 முதல் 115.5 மி.மீ. வரை)

நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

6. வானிலை முன்னெச்சரிக்கை
05.08.2022 – கனமழை முதல் மிக கனமழை – நீலகிரி மாவட்டம்
கனமழை – கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் நாமக்கல்
06.08.2022 – கனமழை - நீலகிரி மற்றும் கோயம்புத்தூர்
07.08.2022 அன்று தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
08.08.2022 அன்று தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

5.8.2022 அன்று குமரிமுனை, மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளில், மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இந்தப் பகுதிகளில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், இந்த எச்சரிக்கை செய்தி, மீன்வளத் துறை மூலமாக மீனவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

7. முன்னெச்சரிக்கை
தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில், அதி கனமழைப் பொழிவு ஏற்பட வாய்ப்புள்ள மாவட்டங்களின் கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேட்டூர் அணையிலிருந்து இன்று காலை 8.45 மணி முதல் 1,80,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் பாதிப்பிற்குள்ளாகும் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கண்காணிப்பு அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பவானிசாகர் அணையிலிருந்து விநாடிக்கு 7,000 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால், ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி, பொதுவான எச்சரிக்கை நடைமுறை  மூலம் 89,692 செல்லிடப்பேசிகளுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது.

பேரிடர் தொடர்பான தகவல்களை துறை அலுவலர்களுக்கும், பொது மக்களுக்கும் தெரிவிக்கும் வகையில், மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையமும், மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களும் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையத்தை முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸ் அப் எண். 94458 69848 மூலமாகவும் புகார்களை பதிவு செய்யலாம். 

கன மழையின் போது தேடல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாவட்ட நிருவாகத்துடன் ஒருங்கிணைந்து ஈடுபடும் பொருட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2 குழுக்களும், நீலகிரி மாவட்டத்தில் 2 குழுக்களும், நாமக்கல் மாவட்டத்தில் 1 குழுவும், ஆக மொத்தம் 110 வீரர்களைக் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையின் 5 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும், திருச்சிராப்பள்ளி, ஈரோடு, நாமக்கல், கன்னியாகுமரி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 238 வீரர்களைக் கொண்ட 6 குழுக்களும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com