திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

கோவை: ஆற்றின் நடுவே நின்றிருக்கும் யானைக்கு யார் சிகிச்சை அளிப்பது? (விடியோ)

தமிழக - கேரள எல்லையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஆற்றின் நடுவே நின்றுகொண்டிருக்கும் யானைக்கு யார் சிகிச்சை அளிப்பது என இரு மாநில வனத்துறையினர் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

News image

ஆற்றின் நடுவே நின்றிருக்கும் யானைக்கு யார் சிகிச்சை அளிப்பது?

Updated On :1 பிப்ரவரி 2024, 3:34 pm IST


கோவை அருகே தமிழக - கேரள எல்லையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஆற்றின் நடுவே நின்றுகொண்டிருக்கும் யானைக்கு யார் சிகிச்சை அளிப்பது என இரு மாநில வனத்துறையினர் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதி கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது. 70 சதவீதம் வனப்பகுதி கொண்ட ஆனைகட்டியில் ஏராளமான யானைகள் உள்ளது. யானைகளின் வலசை பாதையில் முக்கிய பங்கு வைக்கும் ஆனைகட்டி வனப்பகுதியில் எப்போதும் யானைகளின் நடமாட்டம் காணப்படும். இந்நிலையில் ஆனைகட்டி அருகே உள்ள பட்டிசாலை பகுதியில் தமிழக - கேரள மாநிலங்களைப் பிரிக்கும் கொடுங்கரை ஆற்றின் நடுவே உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சோர்வுடன்  8 வயது மதிக்கத்தக்க ஆண் யானை நின்று கொண்டிருக்கிறது.

நேற்று மாலை முதல் இந்த யானை ஆற்றில் நின்று கொண்டு இருப்பதால் இதற்கு யார் சிகிச்சை அளிப்பது என இரு மாநில வனத்துறையினர் யோசனை செய்து வருகின்றனர். அதே வேளையில் கேரள வனப்பகுதிக்குள் வந்து விடாமல் தடுக்கும் வகையில் கேரள வனத்துறையும் தமிழக வனப்பகுதிக்குள் வந்துவிடாமல் தடுக்கும் வகையில் தமிழக வனத்துறையினரும் நிற்பதால் யானை எந்த பகுதிக்கு செல்வது என தெரியாமல் ஆற்றின் நடுவில் பல மணி நேரமாக நின்று கொண்டிருக்கிறது.

இது குறித்து சூழலியல் ஆர்வலர்கள் கூறுகையில் உடனடியாக தமிழக வனத்துறையினர் இந்த யானைக்கு சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும். கேரள வனத்துறையினர் நேற்று முதல் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர். அவர்கள் யானைக்கு சிகிச்சை அளிப்பார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் யானையைக் காப்பாற்ற தமிழக வனத்துறையினர் முன் வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

வழக்கமாக காவல்துறையில்தான் எல்லைப் பிரச்னை இருந்து வரும் நிலையில் வனத்துறையில்  எல்லை பிரச்னையால் யானைக்கு சிகிச்சை அளிக்க தமிழக - கேரள வனத்துறையினர் யோசனை செய்து வருவது சூழலியல் ஆர்வலர்களிடையே  அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.