

சென்னை; அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உயர் நீதிமன்ற தீரிப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் விவரம் முழுமையாக கிடைக்கப்பெறவில்லை. தீர்ப்பின் விவரம் முழுமையாக கிடைத்தப்பின் தலைமைக் கழகம் மூலம் பதில் அளிக்கிறேன் என்று கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
ஜூலை 11-ல் கொண்டு வந்த தீர்மானங்கள் அனைத்தையும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
பொதுக்குழு உறுப்பினர்கள் 2,512 பேர் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக ஏற்றுக் கொண்டுள்ளனர். எம்ஜிஆர், ஜெயலலிதா நடத்தியதுபோலவே நாங்கம் பொதுக்குழவை நடத்தியுள்ளோம்.
பொதுக்குழுவில் பங்கேற்ற உறுப்பினர்கள் ஜூன் 23-ல் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை ஒருமனதாக நிராகரித்துள்ளனர். உயர் நீதிமன்ற தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவு இல்லை என்று செய்தியாளர்களிடம் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
இதையும் படிக்க: அதிமுக உட்கட்சி பிரச்னையில் தலையிட விருப்பம் இல்லை: அப்பாவு
அதிமுக பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. மீண்டும் பொதுக்குழுவை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அக்கட்சியின் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.