மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களில் மலர் மாலைகள் சாற்றும் பணி!விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டாம்! சீனு ராமசாமிஇடைத்தேர்தலில் பாமக போட்டியில்லை! யாருக்கு ஆதரவு? அன்புமணி பேட்டிராஜிநாமா செய்தவர்களே இடைத்தேர்தலில் போட்டியிடுவது கேலிக்கூத்து! உயர் நீதிமன்றம் அதிருப்தி!ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!

ஓபிஎஸ் தரப்பினருக்கு கிடைத்துள்ள வெற்றி நிரந்தரமானது அல்ல: ஜெயக்குமார்

ஓபிஎஸ் தரப்பினருக்கு கிடைத்துள்ள வெற்றி நிரந்தரமானது அல்ல என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஜெயக்குமார் (கோப்புப்படம்)

Published On :

சென்னை: ஓபிஎஸ் தரப்பினருக்கு கிடைத்துள்ள வெற்றி நிரந்தரமானது அல்ல என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சட்ட வல்லுநர்களுடம் ஆலோசித்து அடுத்த முடிவு எடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.  மீண்டும் பொதுக்குழுவை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இபிஎஸ்-ஐ இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்  இணைந்துதான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து, மேல்முறையீடு செய்வது பற்றி சென்னையில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.