‘பதவிவெறி பிடித்தாடும் துரோகக் கும்பல்’: ஈபிஎஸ்ஸை விமர்சித்த டிடிவி தினகரன்

அனைவரும் இணக்கமாக செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ள ஓபிஎஸ்ஸின் கருத்தை வரவேற்றுள்ள டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துள்ளார்.
டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்
Updated on
1 min read

அனைவரும் இணக்கமாக செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ள ஓபிஎஸ்ஸின் கருத்தை வரவேற்றுள்ள டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவும், பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்தெடுக்கப்பட்டது செல்லாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் மனக்கசப்புகளை மறந்து ஒன்றுபட்டு செயல்பட எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை மறுத்த எடப்பாடி கே.பழனிசாமி ஓபிஎஸ் பதவிக்காக இவ்வாறு நடந்து கொள்வதாக விமர்சித்தார்.

இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சுட்டுரைப் பதிவில், “தீயசக்தியான தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் இணக்கத்துடன் செயல்படவேண்டும் என்ற திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் கருத்தை சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவர் ஒருவரும் வரவேற்கவே செய்வார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “அதேசமயம், சுயநலத்தின் உச்சமாக, பதவி வெறிபிடித்தாடும், துரோக சிந்தனை உடைய ஒரு கும்பல் நல்லதை எப்போதும் ஏற்காது என்பதும் அனைவரும் அறிந்ததே” எனக் குறிப்பிட்டு எடப்பாடி கே.பழனிசாமியை விமர்சித்துள்ளார்.

அதிமுகவில் தொடர்ந்துவரும் தலைமை பதவிக்கான மோதல் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com