சென்னை: ஓபிஎஸ்ஸுடன் இணைய முடியாது என்று எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
மாபெரும் இயக்கமான அதிமுகவை சிலர் தன்சவப்படுத்த நினைக்கின்றனர். அதிமுகவை சில பேர் தன்வசம் கொண்டு போக முயற்சித்ததே இன்றைய நிலைக்கு காரணம்.
பொதுக்குழு உறுப்பினர்களால்தான் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாகின.
பொதுச்செயலாளருக்கு சமமாக இரட்டைப் பதவிகள் கொண்டுவந்து சட்டவிதிகள் திருத்தப்பட்டன. பொதுக்குழு உறுப்பினர்களால் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. 2663 பொதுக்குழு உறுப்பினர்களும் அதிமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ஒற்றைத் தலைமை வேண்டுமென அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ரெளவுடிகளை வைத்து அதிமுக அலுவலகத்தையும் எங்கள் தரப்பினரையும் ஓபிஎஸ் தாக்கச் செய்தார். தானும் தனது மகனும் பதவியில் இருக்க வேண்டும் என நினைப்பவர் ஓபிஎஸ். அண்ணன் ஓபிஎஸ்-ம் நானும் பிரிந்திருந்தோம். 2017-ல் மீண்டும் இணைந்தோம்
பொதுக்குழுவுக்கு நாங்கள் அழைப்பு விடுத்தபோது நிராகரித்த ஓபிஎஸ், ஏன் நீதிமன்றங்களை நாடிச் செல்கிறார். ஓபிஎஸ்-யிடம் உழைப்பு கிடையாது, பதவி மட்டும் வேண்டும், யார் எப்படி போனாலும் அவருக்கு கவலையில்லை.கட்சி உயர் பொறுப்பில் உள்ள ஓபிஎஸ் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டால் எப்படி செயல்பட முடியும் என்று எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சென்னை இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களிடம் சந்தித்த ஓபிஎஸ், மனக்கசப்புகளை மறந்து ஒன்றுபட்டு செயல்பட எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற ஓபிஎஸ் தரப்பின் அழைப்பை இபிஎஸ் தரப்பு நிராகரித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


