
தமிழக நிதி அமைச்சர் கார் மீது காலணி வீசிய வழக்கில் மேலும் 2 பேருக்கு ஜாமீன் வழங்கி மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதி அமைச்சரின் காரை முற்றுகையிட்டு பாஜகவினா் போராட்டம் நடத்தினா். அப்போது அவரது காா் மீது காலணி வீசப்பட்டது. இச் சம்பவம் தொடா்பாக அவனியாபுரம் போலீஸாா் 24 போ் மீது வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கில் பாஜகவை சோ்ந்த குமாா், பாலா, கோபிநாத், மற்றொரு கோபிநாத், ஜெயகா்ணா, முகமதுயாகூப், தனலெட்சுமி, சரண்யா, தெய்வானை ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இவா்கள் ஜாமீன் கோரி, மதுரை நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் (எண் 6) மனுக்களை தாக்கல் செய்திருந்தனா். ஆகஸ்ட் 22-ல் விசாரித்த நீதித்துறை நடுவா் சந்தானகுமாா், தனலெட்சுமி, சரண்யா, தெய்வானை ஆகியோரது ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தாா். குமாா் உள்பட 6 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.
மேலும், தனலெட்சுமி உள்பட மூவரை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக காவல் துறை தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைக்கு வந்தது.
இதையும் படிக்க: அபுதாபி மாஸ்டர்ஸ் செஸ்: இந்திய வீரர் சாம்பியன்
இந்நிலையில் கைதான தனலட்சுமி, தெய்வானை ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி 6வது நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.