ஆம்பூர் அருகே பாலாற்றில் வெள்ளம்: பச்சைக்குப்பம் தரைப்பாலம் மூழ்கியது

ஆம்பூர் அருகே பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பச்சைக்குப்பம் தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது.
பச்சைக்குப்பம் தரைப்பாலம் மூழ்கியது
பச்சைக்குப்பம் தரைப்பாலம் மூழ்கியது

ஆம்பூர் அருகே பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பச்சைக்குப்பம் தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது. பாதுகாப்பு கருதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர் முற்றிலுமாக தடை விதித்துள்ளனர்.

கடந்த 5  நாட்களாக ஆந்திர மாநில வனப்பகுதிகள் மற்றும் மாவட்ட முழுவதும் பெய்த கன மழை காரணமாக பாலாற்றில் மழை நீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சைக்குப்பம் பாலாற்றில் உள்ள தரைப்பாலம் முற்றிலுமாக நீரில் மூழ்கியுள்ளது.

இதனால் ஆம்பூரில் இருந்து அழிஞ்சி குப்பம், மேல் வைதனங்குப்பம், மேல்பட்டி, நரியம்பட்டு, சங்கராபுரம், கடாம்பூர் உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட கிராமங்களுக்கும், இதேபோல் அப்பகுதியில் இருந்து ஆம்பூருக்கு வரக்கூடிய பொது மக்களின பாதுகாப்பு கருதி பாலத்தை கடக்க காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் 10 கிலோ மீட்டர் சுற்றி ஆம்பூர் தேவாலபுரம் பகுதியில் உள்ள மேம்பாலத்தை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மழைக் காலங்களில் அதிக அளவு மழை பெய்தால் பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டு இது போன்ற நிலை ஏற்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com