புதுச்சேரியில் 2 நாள்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

'மாண்டஸ்' புயலால் தொடர் மழை பெய்து வருவதால் புதுச்சேரியில் இன்றும், நாளையும் (டிச. 9, 10) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்


'மாண்டஸ்' புயலால் தொடர் மழை பெய்து வருவதால் புதுச்சேரியில் இன்றும், நாளையும் (டிச. 9, 10) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் இன்று கரையைக் கடக்கவுள்ள நிலையில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. அது டிச.7ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது.

'மாண்டஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள புயல், சென்னையிலிருந்து 320 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலிலிருந்து 240 கிலோ மீட்டர் தொலைவிலும் மாண்டஸ் புயல் நிலைகொண்டுள்ளது.

தொடர்ந்து வடமேற்கு திசையில் மாண்டஸ் புயல் நகர்ந்து வரும் நிலையில், இரவு கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால், புதுச்சேரியில் இன்றும், நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் யாரும் கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com