கோப்புப் படம்
கோப்புப் படம்

28 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

'மாண்டஸ்' புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாண்டஸ் புயல் இன்று கரையைக் கடக்கவுள்ள நிலையில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.

வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. அது டிச.7ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது.

'மாண்டஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள புயல், சென்னையிலிருந்து 320 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலிலிருந்து 240 கிலோ மீட்டர் தொலைவிலும் மாண்டஸ் நிலைகொண்டுள்ளது.

கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்துகொண்டிருந்த நிலையில் தற்போது 12 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகங்கள் விடுமுறை அறிவித்துள்ளன. அந்தவகையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (டிச.9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  இதேபோன்று திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல், சிறுமலையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.9) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com