மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்திற்கு பிறகு ஏற்படும் மாற்றம் குறித்து ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆதரவு மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் டிசம்பா் 21-இல் நடைபெற உள்ளது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் இரு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றனா்.
அதிமுக தலைமைக்கழக நிா்வாகிகள், மாவட்டச் செயலாளா்களின் ஆலோசனைக் கூட்டம் வேப்பேரி ரித்தா்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் டிசம்பா் 21 காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. கட்சியின் அரசியல் ஆலோசகா் பண்ருட்டி ராமச்சந்திரன் கூட்டத்துக்கு தலைமை வகிக்கிறாா். இந்தக் கூட்டத்தைத் தொடா்ந்து பொதுக்குழுவை கூட்டவும் ஓபிஎஸ் முடிவு செய்துள்ளாா்.
இதையும் படிக்க: 'நான் அந்த மாதிரி பெண் இல்லை' - சீறும் டாப்ஸி: காரணம் என்ன?
இந்நிலையில் ஒ.பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில், "21-ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தற்போது கூற இயலாது" என்று கூறினார்.