நெய்வேலி அனல்மின் நிலையத்தில் தீ விபத்து: 5 தொழிலாளர்கள் காயம்

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் புதிய அனல்மின் நிலையத்தில் நேரிட்ட தீ விபத்தில் சிக்கி ஐந்து பேர் காயமடைந்தனர்.
என்.எல்.சி விபத்து (கோப்பிலிருந்து)
என்.எல்.சி விபத்து (கோப்பிலிருந்து)

நெய்வேலி அனல்மின் நிலையத்தில் தீ விபத்து: 5 தொழிலாளர்கள் காயம்
நெய்வேலி: கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள அனல்மின் நிலையத்தில் வியாழக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் 5 தொழிலாளர்கள் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் அனல்மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்நிறுவனம் நெய்வேலி பகுதியில் 3 சுரங்கங்களை அமைத்து பழுப்பு நிலக்கரியை வெட்டி எடுத்து மின் உற்பத்தி செய்து தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு மின் விநியோகம் செய்து வருகிறது.

அண்மையில் நெய்வேலி புதிய அனல் மின் நிலையம் கட்டமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த அனல் மின் நிலையத்தில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பங்கரில் பழுப்பு நிலக்கரியை ஏற்றும்போது தீ விபத்து ஏற்பட்டதில் ஒரு நிரந்தர தொழிலாளி உள்ளிட்ட நான்கு இன்க்கோசர் ஒப்பந்த தொழிலாளர்கள் தீக்காயம் அடைந்தனர். காயமடைந்த ஐந்து பேரும் மீட்கப்பட்டு என்எல்சி பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com