12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

மாணவியை தாக்கிய இளைஞர்: விசாரணைக்கு பயந்து தற்கொலை!

காதலிக்க கோரி பள்ளி மாணவியை பேருந்தில் தாக்கிய இளைஞர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published On :

காதலிக்க கோரி பள்ளி மாணவியை பேருந்தில் தாக்கிய இளைஞர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த எல்லப்பன்பட்டியை சேர்ந்த டிரக்டர் ஓட்டுனர் மணி(21) என்ற இளைஞர், மாதனூரில் உள்ள தனியார் பள்ளியில் 10 ம் வகுப்பு படிக்கும் மடிகம் பகுதியை சேர்ந்த மாணவியை தான் ஒரு தலையாக காதலித்து வந்தார்.

இன்று பள்ளிக்கு தனியார் பேருந்தில் செல்லும் போது பொது இடத்தில் வைத்து காதலிக்குமாறு மாணவியை தாக்கியதாக, மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வேப்பங்குப்பம் காவல்துறையினர் இளைஞர் மணியை விசாரிக்க சென்றபோது அவர் இல்லாததால் திரும்பியுள்ளனர். 

இந்நிலையில் மணி பள்ளிகொண்டா அடுத்த பள்ளிகுப்பத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் இருப்பது தெரிந்து அங்கு சென்று பார்த்த போது, அவர் வீட்டிற்கு அருகே உள்ள வேப்பமரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பள்ளிகொண்டா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், காவல் துறையின் விசாரணைக்கு பயந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.