ஆம்பூர் அருகே மீன் ஏற்றிச் சென்ற மினி வேன் கவிழ்ந்து விபத்து

சென்னையில் இருந்து சேலம் மேட்டூர் மீன் மார்க்கெட்டுக்கு வேனில் கொண்டு செல்லப்பட்ட ஒரு லட்சம் மதிப்பிலான மீன்கள் சாலையில் கொட்டி சிதறி கிடந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஆம்பூர் அருகே மீன் ஏற்றிச் சென்ற மினி வேன் கவிழ்ந்து விபத்து

சென்னையில் இருந்து சேலம் மேட்டூர் மீன் மார்க்கெட்டுக்கு வேனில் கொண்டு செல்லப்பட்ட ஒரு லட்சம் மதிப்பிலான மீன்கள் சாலையில் கொட்டி சிதறி கிடந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


சென்னையில் இருந்து சேலம் மேட்டூர் மீன் மார்க்கெட்டுக்கு மினி வேன் மூலம் தெர்மாகோல் பொருத்தப்பட்ட  15 அட்டைப் பெட்டிகளில் கொண்டு செல்லப்பட்ட மினி வேன்  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது பச்சகுப்பம் மேம்பாலம் பகுதியில் திடீரென கவிழ்ந்தது. 

இருசக்கர வாகனத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் சாலையைக் கடந்த போது வேகமாக வந்து கொண்டிருந்த மினி வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 
இதில் இருசக்கர வாகனத்தில் வந்த வெங்கடேசன் மற்றும் அவரது மகன் இருவரும் பலத்த காயமடைந்து ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சேலம் மேட்டூர் பகுதியை சேர்ந்த ஓட்டுனர் பிரபாகரன் சிறுகாயங்களுடன் உயிர்தப்பிய நிலையில் வேனில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான மீன்கள் சாலையில் கொட்டி சிதறி கிடந்ததால் பின்னால் வந்த வாகனங்கள் வரிசை கட்டி நிற்கும் நிலை உருவானது.  இதனால், சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், விபத்துக்குள்ளாகி சாலையில் மீன்கள் கொட்டியதால் 40 ஆயிரம் மதிப்புள்ள மீன்கள் சேதமாகி நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆம்பூர் கிராமிய போலீசார் சாலையில் கொட்டிய மீன்களை அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com