தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜன.9 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்ததாவது:
ஜனவரி 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடவுள்ளது. அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்கு பின் சட்டப்பேரவை எவ்வளவு நாள்கள் நடக்கும் என முடிவு செய்யப்படும்.
ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் என்பதால், கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுவார். ஆளுநர் உரை நேரடியாக ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடரின் போது, கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அமைச்சர் உதயநிதிக்கு, அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு அடுத்த இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாஃபியாவின் பிடியில் கல்வி அமைப்புமுறை: கேஜரிவால் குற்றச்சாட்டு
இன்றைய ராசி பலன் (31.05.2026) - விருச்சிகம்

இன்றைய ராசி பலன்கள் (மே 31 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு அமைதி!

தைரியம் கூடும் மகர ராசிக்கு: இன்றைய ராசி பலன்கள் (மே 31)
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



