
ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அவரது தற்கொலைக்கு என்ன காரணம் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. அவரது எம்.எஸ்.தோனி திரைப்படம் இந்தியா முழுவதும் மிகுந்த வரவேற்பினைப் பெற்ற திரைப்படமாகும். இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.
தற்போது, “ சுஷாந்த் சிங் தற்கொலை செய்யவில்லை. கொலை செய்யப்பட்டு இருக்கலாம். அவரது உடலை பார்த்ததும் எனக்கு தோன்றியது. நான் எனது மேலதிகாரிக்கு இது குறித்து கூறினேன். இரவில்தான் அவர்கள் உடற்கூராய்வை செய்தனர். அவர்கள் மொபைலில் புகைப்படம் மட்டுமே எடுத்துக் கொண்டனர். விடியோ எடுக்கவில்லை. சரியான முறையில் அவர்கள் இதை செய்யவில்லை” என பிணவறை தொழிலாளர் ரூப்குமார் ஷா என்பவர் சர்சைக்குள்ளான கருத்து தெரிவித்துள்ளார். சுஷாந்தின் உடற்கூராய்வின் போது அவரும் அங்கிருந்ததாக கூறியுள்ளார்.
சமூக வலைதளம் முழுக்க இந்த செய்தி தீயாக பரவி வருகிறது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...