பொங்கல் சிறப்பு ரயில் முன்பதிவு நாளை முதல் தொடக்கம்

பொங்கல் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை முதல்(டிசம்பர் 29) தொடங்கவிருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பொங்கல் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை முதல்(டிசம்பர் 29) தொடங்கவிருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து திருநெல்வேலி, நாகா்கோவில் மற்றும் கேரளத்துக்கு சிறப்பு கட்டண ரயில்கள் ஜன.12 முதல் இயக்கப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தாம்பரத்திலிருந்து 2023, ஜன.12-ஆம் தேதி இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்.06021) மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

மறுமாா்க்கமாக திருநெல்வேலியிலிருந்து ஜன.13-ஆம் தேதி பகல் ஒரு மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்.06022) மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூா் சென்றடையும்.

இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி வழியாக இயக்கப்படுகின்றன.

தாம்பரத்திலிருந்து ஜன.13-ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண்.06041) மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகா்கோவில் சென்றடையும்.

மறுமாா்க்கமாக நாகா்கோவிலிலிருந்து ஜன.16-ஆம் தேதி மாலை 5.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 7.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

தாம்பரத்திலிருந்து ஜன.16-ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்.06057) மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

மறுமாா்க்கமாக திருநெல்வேலியிலிருந்து ஜன.17-ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்.06058) மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா் வழியாக இயக்கப்படுகின்றன.

கேரளம் செல்லும் சிறப்பு ரயில்கள்: கேரளத்தின் கொச்சுவேலியிலிருந்து ஜன.17-ஆம் தேதி காலை 11.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்.06044) மறுநாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

மறுமாா்க்கமாக தாம்பரத்திலிருந்து ஜன.18-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்.06043) கேரளத்தின் கொச்சுவேலிக்கு காலை 3.20 மணிக்கு சென்றடையும்.

இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா் துறைமுகம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூா், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகா்கோவில் டவுண், குழித்துறை, திருவனந்தபுரம் வழியாக இயக்கப்படுகின்றன.

கேரளத்தின் எா்ணாகுளத்திலிருந்து ஜன.12 இரவு 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்.06046) மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.

மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரலிலிருந்து ஜன.13-ஆம் தேதி பகல் 2.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்.06045) மறுநாள் காலை 3.10 மணிக்கு கேரளத்தின் எா்ணாகுளம் சென்றடையும்.

இந்த ரயில் தமிழகத்தின் கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, வழியாக இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com