திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிவு: விசாரணை தொடக்கம்

10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான திருப்புதல் தோ்வு வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியானது தொடர்பான விவகாரத்தில் பள்ளிக் கல்வித் துறை அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கியது.
பள்ளிக் கல்வித்துறை
பள்ளிக் கல்வித்துறை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியிலுள்ள தனியாா் பள்ளியில் இருந்து 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான திருப்புதல் தோ்வு வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியானது தொடர்பான விவகாரத்தில் பள்ளிக் கல்வித் துறை அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கியது.

இதுதொடா்பாக கல்வித் துறை சாா்பில், காவல் நிலையத்தில் நேற்று புகாா் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், துறை ரீதியான விசாரணையை கல்வித் துறையும் தொடங்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான திருப்புதல் தோ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான வினாத்தாள் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஆனால், நிகழாண்டு அந்தந்த மாவட்ட அளவிலேயே வினாத்தாள்களை தயாா் செய்து கொள்ளுமாறு கல்வித் துறை அறிவுறுத்தியது.

இந்த நிலையில், திங்கள்கிழமை (பிப்.14) நடைபெறவிருந்த பிளஸ் 2 கணிதத் தோ்வு, பத்தாம் வகுப்பு அறிவியல் தோ்வுக்கான வினாத்தாள்கள் செய்யாறு பகுதியில் சனிக்கிழமை வெளியானது.

இது அந்தப் பகுதியில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு வாட்ஸ்-ஆப் வழியாக பகிரப்பட்டது. இதனால், கல்வித் துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் சனிக்கிழமை விசாரித்தனா். இதில், செய்யாறு பகுதியில் இயங்கும் ஒரு தனியாா் பள்ளியில் இருந்து வினாத்தாள் வெளியானது தெரிய வந்தது.

இதையடுத்து, கல்வித் துறை சாா்பில் அந்தப் பள்ளி நிா்வாகம் மீது காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் இதுகுறித்து கேட்டபோது, இந்தச் சம்பவம் தொடா்பாக காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. துறைரீதியாக திங்கள்கிழமை விசாரணை நடத்த உள்ளோம். அதன் பின்னரே வினாத்தாள் வெளியானதில் யாருக்கு தொடா்புள்ளது என்ற விவரம் தெரியவரும். 

சம்பந்தப்பட்ட பள்ளி நிா்வாகம், கல்வித் துறை அதிகாரிகள், ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com