தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் பதவிக் காலம் நீட்டிப்பு

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரித்து வரும் நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் காலம் மீண்டும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image

அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் பதவிக் காலம் நீட்டிப்பு

Updated On :23 பிப்ரவரி 2022, 12:42 pm

DIN


தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரித்து வரும் நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் காலம் மீண்டும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழக அரசின் பொதுத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

தூத்துக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் கடந்த 2018 மே 22-ஆம் தேதி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. அதில் சிலா் இறந்தனா். இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க உயா் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் காலம் பிப்ரவரி 22-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

இந்தச் சூழலில், அரசுக்கு நீதிபதி அருணா ஜெகதீசன் எழுதிய கடிதத்தில், விசாரணை தொடா்ந்து மேற்கொள்ளவும், அறிக்கையை நிறைவு செய்து அரசுக்கு அளிக்கவும் விசாரணை ஆணையக் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தாா். இதையடுத்து, விசாரணை ஆணையக் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு அதாவது 2022-ஆம் ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது. இந்த 3 மாதங்களுக்குள் விசாரணை ஆணையம் தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வரும் 2022-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதியன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ அறிக்கையை ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் அரசுக்கு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.