
எடப்பாடி பழனிசாமி (கோப்புப் படம்)
பெருந்துறை: பெருந்துறையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்திக்கு, பணம் கேட்டு கொலை மிரட்டல் செய்த மூவரை, பெருந்துறை போலீசார் கைது செய்து விசாரித்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பெருந்துறை, சென்னிமலை ரோடு, உழவன் நகரில் குடியிருப்பவர் சுப்பிரமணியன். இவர், தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி ஆவர். இவருக்கு, கடந்த 2021 டிசம்பர் மாதம் 26 ம் தேதியில் இருந்து தொடர்ந்து ஒரே செல் போனில், பல முறை பணம் கேட்டு கொலை மிரட்டல் வந்தது.
இதுகுறித்து, பெருந்துறை காவல் துறையில் சுப்பிரமணியன் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில், காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, நேற்று (வெள்ளிக்கிழமை), சத்தியமங்கலம், பன்னாரி ரோடு, உதயம் நகரைச் சேர்ந்த ரங்கசாமி மகன் பால்ராஜ்,60. சத்தியமங்கலம், தடத்தபள்ளி, இக்கரை, வெள்ளியம்பாளையம்புதூரைச் சேர்ந்த சந்திரன்,48. சத்தியமங்கலம், ராஜீவ் நகரைச் சேர்ந்த நடராஜன் மகன் சீனிவாசன்,41, ஆகியோரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய தலை மறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...